News March 2, 2025

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்

image

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கி, 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு பிரம்மோற்சவம், நாளை (மார்ச்.3) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை மறுதினம், சந்திரபிரபை, 5ம் தேதி யானை வாகனம், 10ம் தேதி குதிரை வாகனம் உற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News August 25, 2025

காஞ்சிபுரத்தில் அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
▶️பான்கார்டு: NSDL
▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.in
<>இந்த இணையதளங்களில்<<>> விண்ணப்பியுங்க.

News August 25, 2025

காஞ்சிபுரம்: +2 போதும், ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

image

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர், ரேடியோ மெக்கானிக் பதவிக்கு 1121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு +2 மற்றும் ITI படித்த 18 முதல் 25 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.25,500-81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

காஞ்சிபுரம்: போனில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

image

காஞ்சிபுரம், சோமங்கலம் அருகே வசித்து வருபவர் சரவணன். இவரது மகன் கோகுல் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோகுல் பள்ளிக்கு செல்லாமல் போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!