News March 2, 2025
பெண்களுக்கு எதிரான குற்றம் 52% அதிகரிப்பு: ராமதாஸ்

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டில் 52% அதிகரித்துள்ளதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4,581 பதிவாகியிருந்த நிலையில், கடந்தாண்டு 6,975ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குற்றங்களை தடுக்க அரசும், காவல்துறையும் தவறிவிட்டதாகவும், தமிழகத்தை பெண் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக மாற்றிவிடக் கூடாது என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
திருப்பூர்: காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15-வயது சிறுமி ஒருவர் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய புதுக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து (20) என்பவர், காதலிப்பதாக கூறி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News March 15, 2026
போனில் ஈசியாக பட்டா எடுக்கலாம் தெரியுமா?

*‘<
News March 15, 2026
சிறுபான்மையினரை காத்த அதிமுக அரசு: EPS

தனது ஆட்சிக்காலம் தான் சிறுபான்மை மக்களுக்கு பொற்காலம் என்பதை வரலாறு சொல்லும் என EPS தெரிவித்துள்ளார். இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறுபான்மை மக்களை காப்பது தாங்கள் தான் என்ற மாய தோற்றத்தை திமுக திட்டமிட்டு ஏற்படுத்துவதாக கூறினார். உண்மையிலேயே கண்ணை இமை காப்பது போல சிறுபான்மை மக்களை காப்பது அதிமுக மட்டுமே தான் என்றும் பேசினார்.


