News March 2, 2025
சீமானுக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்கும் மத்திய அரசு?

தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், சீமான் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவை எனவும் கூறியுள்ளனர். இதைக்கேட்ட அமித்ஷா, இதுகுறித்த கோப்புகளை தனக்கு விரைவாக அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால், விஜய்யைத் தொடர்ந்து சீமானுக்கும் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 16, 2026
வீட்டு சிலிண்டர்.. நாட்டு மக்களுக்கு அரசு அறிவிப்பு

நாட்டில் நிலவும் கேஸ் தட்டுப்பாடு குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிலிண்டர் பதுக்குதல், கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவை இல்லாத நிலையிலும் பீதியுடன் முன்பதிவு செய்வதை மக்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT
News March 16, 2026
நடிகை ஊர்வசி மகளின் புதிய PHOTOS

நடிகை ஊர்வசி, நடிகர் மனோஜ் கே விஜயனின் மகள் தேஜலட்சுமியின் போட்டோக்கள் படுவைரலாகி வருகின்றன. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ள தேஜலட்சுமி, சுந்தரியவள் ஸ்டெல்லா என்ற படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தேஜலட்சுமி, Vintage ஸ்டைலில் பதிவிட்ட போட்டோஸ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. ஊர்வசியை போலவே இவரும் ரசிகர்களை கவருவாரா?
News March 16, 2026
2001-ல் பாஜகவால் திமுக தோற்றது: TKS இளங்கோவன்

பாஜக கூட்டணிக்கு யார் சென்றாலும் தோல்வியை தழுவுவார்கள் என TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணிக்கு விஜய் சென்றால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, அப்படி ஒருவேளை நடந்தால் அது தங்களுக்கு நன்மை தான் என அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததாலேயே 2001 தேர்தலில் திமுக தோற்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 2001-ல் பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணிக்கு 37 இடங்களே கிடைத்தது.


