News March 2, 2025

அதிகரிக்கும் தங்க நகைக்கடன்!

image

வங்கிகள் வழங்கும் சிறுகடன்களில் அடமானம் இல்லாதக் கடனுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டதால், மக்கள் கவனம் தங்க நகைக்கடன் பக்கம் திரும்பியதாக RBI தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் 18.2%ஆக இருந்த சில்லரைக் கடன் வர்த்தகம், 2025 ஜனவரியில் 14.2%ஆக குறைந்துள்ளது. அதேநேரம், கடந்த ஜனவரியில் 17.4%ஆக இருந்த தங்க நகைக்கடன் ஒவ்வொரு மாதமும் 50%க்கும் மேல் வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாகவும் RBI கூறியுள்ளது.

Similar News

News March 22, 2026

விஜய் ஒரு தலைவனே கிடையாது: சரத்குமார்

image

தவெக பற்றி மதிப்பிட ஒன்றுமே கிடையாது என சரத்குமார் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு தலைவனே கிடையாது என்று கூறிய அவர், கரூரில் உயிரிழந்த 41 பேரை சென்னைக்கு அழைத்து துக்கம் விசாரித்தபோதே இது தெரிந்துவிட்டது எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், 1996-ல் எப்படி பிரசாரம் செய்தேனோ, அதேபோல இந்த முறையும் அனைத்தையும், அனைவரையும் விலாவரியாக விமர்சித்து பிரசாரம் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 22, 2026

FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

22 கேரட் தங்கம் 1 சவரன் இந்தாண்டு மட்டும் சுமார் <<19451069>>₹25,000 வரை<<>> குறைந்துள்ளது. தற்போது, 1 கிராம் ₹13,620-க்கும் 1 சவரன் ₹1,08,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சவரனுக்கு மேலும் ₹20,000 வரை குறையக் கூடும் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதேநேரம், மீண்டும் விலை உயரத் தொடங்கிய பின் 1 கிராம் ₹ 22,000 என்ற உச்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளதாம். SHARE IT

News March 22, 2026

BREAKING: வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்

image

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் அறிவித்துள்ளார். லாஸ்பேட்டை-சாமிநாதன், காரைக்கால் தெற்கு-அசனா, நெட்டப்பாக்கம்- பெரியசாமி, முத்தியால்பேட்டை-பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இருந்து விலகிய Ex அமைச்சர் சாய் சரவணனுக்கு திருபுவனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!