News March 2, 2025

மீனவர்களை சந்தித்த ஆளுநர் ரவி

image

ராமேஸ்வரத்தில் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை ஆளுநர் ரவி நேரில் சென்று சந்தித்தார். இலங்கை கடற்படையைக் கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரியும் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரம் சென்றுள்ள ஆளுநர் ரவி, மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Similar News

News March 26, 2026

ராம நவமி வழிபாட்டின் ‘8’ முக்கிய விதிமுறைகள்!

image

ராமநவமி நாளான இன்று இவற்றை பின்பற்றுங்கள்: வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் ◆காலையில் புனித நீராடுங்கள் ◆வீட்டையும் பூஜை அறையையும் பூக்களை கொண்டு அலங்கரியுங்கள் ◆கருப்பு உடைகளை தவிருங்கள் ◆விரதத்தை மேற்கொண்டு ராம நாமத்தை உச்சரியுங்கள் ◆ராமாயணத்தை படியுங்கள் ◆தானம் செய்யுங்கள் ◆மது, அசைவ உணவு, தகாத வார்த்தைகள் கூடாது ◆ராமரின் 14 ஆண்டுகால வனவாசத்தை நினைவுகூரும் விதமாக ஒரு மரத்தையாவது நடுங்கள்.

News March 26, 2026

நான் வேட்பாளர் இல்லை: தமிழிசை

image

தேர்தல் பிரசாரத்தை EPS நேற்று மயிலாப்பூரில் தொடங்கினார். அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு மயிலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரசாரத்தில் EPS உடன் தமிழிசை கலந்து கொண்டார். இதனால், அவர்தான் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் என்று தகவல் பரவியது. ஆனால், அண்ணன் எடப்பாடியார் அழைத்ததன் பேரில் பிரசாரத்தில் கலந்து கொண்டதாகவும், வேட்பாளரை பாஜக விரைவில் அறிவிக்கும் என்றும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

Voter List-ல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்

image

2026 தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக திருத்தம் செய்து வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், விடுபட்ட நபர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!