News March 2, 2025
5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: IMD

நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் மாவட்டங்களில் இரவு முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்காசி குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து 2ஆவது நாளாக அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வெளியே செல்வதாக இருந்தால் குடையுடன் போங்க..
Similar News
News March 17, 2026
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 16ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது.
அதன் படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News March 16, 2026
தமிழ் நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

நடிகை பிரதியுஷா மரண வழக்கில் கோர்ட் உத்தரவை அடுத்து, அவரது காதலன் சித்தார்த் சரணடைந்துள்ளார். சித்தார்த்துக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை SC உறுதி செய்ததை அடுத்து, இன்று அவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் பிரதியுஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
இந்தியா வந்தடைந்தது LPG கப்பல்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு இடையே LPG எரிவாயுவை ஏற்றி வந்த சிவாலிக் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக இன்று இந்தியா வந்ததடைந்தது. கத்தாரிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், ஆபத்தான ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இன்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால், நாடு முழுவதும் நிலவி வரும் LPG தட்டுப்பாடு விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


