News March 2, 2025
திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

போதைப்பழக்கம் இல்லாத திருவள்ளூரை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் ‘DRUG FREE TN’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலியை பொதுமக்கள், மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டால், ,புகார்களாக பதிவேற்றம் செய்யலாம் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
திருவள்ளூர்: சென்ட்ரல் மின்சார ரயில்கள் ரத்து

பொன்னேரி கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி (இரவு 11:20 ரயில்) மற்றும் கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் (இரவு 9:25 மணி ரயில்) இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
திருவள்ளூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News August 29, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நேற்று (ஆக.28) இரவு 11 மணி முதல் இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.