News March 2, 2025
24 ஆண்டில் இல்லாத மோசமான நிலையில் இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நேற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் ODIல் அந்த அணி தொடர்ச்சியாக 7 தோல்விகளுடன் 24 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 2000-01 காலக்கட்டத்தில் அந்த அணி 11 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவி இருந்தது. தோல்விக்கு என்ன காரணம்’னு நினைக்கிறீங்க!
Similar News
News March 22, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார்

திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறுவதாக வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வதாக திமுக கூறியது. ஆனால், கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, 10 அம்ச கோரிக்கை உள்ளிட்ட நாங்கள் வைத்த எந்த கோரிக்கையும் திமுக பரிசீலிக்கவில்லை என்பதால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
News March 22, 2026
ரகசிய ஆலோசனை நடத்தினாரா அண்ணாமலை?

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கரூரில் உள்ள முக்கிய பிரமுகர் வீட்டில் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் கேட்டாராம். இதுதொடர்பான போட்டோ வெளியாகி தலைமையை கடுப்பாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், மரியாதை நிமித்தமான சந்திப்பு, தொண்டர்கள் விருப்பப்பட்டு எடுத்த போட்டோ என அண்ணாமலை சமாளித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
News March 22, 2026
பெண்கள் Safety-க்காக போனில் இத பண்ணுங்க!

➤Phone Settings-க்கு சென்று, Emergency SOS என தேடி அதை ON செய்யுங்கள் ➤நம்பகமானவர் (உறவினர்/நண்பர்) Contact-ஐ அதில் உள்ளிடுங்கள் ➤நீங்கள் ஏதேனும் பிரச்னையில் சிக்கும்போது Power button-ஐ 3 முறை அழுத்தினாலே போதும். உங்களுடைய Live Location போலீசுக்கும், உறவினருக்கும் சென்றுவிடும். பெண்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்த இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


