News March 2, 2025
செக் மோசடி.. வனிதா மீது போலீசில் புகார்!

நடிகை வனிதா மீது தன்ராஜ் என்பவர் செக் மோசடி புகார் அளித்திருக்கிறார். வனிதா நடித்துள்ள ‘MRS & MR’ படத்தின் சாட்டிலைட் உரிமைக்காக ₹40 லட்சம் செக் கொடுத்து வனிதா ஏமாற்றிவிட்டதாக அவர் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அவர் யாரென்றே தெரியாது எனவும், தன் கையெழுத்தை போலியாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் வனிதா சென்னை கமிஷனர் ஆபீஸில் புகார் அளித்து இருக்கிறார். என்ன நடக்குதுனு புரியலையே!
Similar News
News March 13, 2026
வீட்டு சிலிண்டர் கிடைக்காது.. BIG SHOCKING

போர் பதற்றத்துக்கிடையே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இன்னும் 2 வாரங்களுக்கு இதே நிலை நீடித்தால் வீட்டு உபயோக சிலிண்டர் கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டால் சாலையோர கடைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
News March 13, 2026
தவெகவுடன் கூட்டணியா? ரங்கசாமி கூறினார்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால், தவெகவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு, அவ்வாறு தவெகவுடன் பேச்சுவார்த்தை நடந்தால் முதலிலேயே கூறிவிடுகிறேன் என்று புதுவை CM ரங்கசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நன்றாக நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 13, 2026
OBC கிரீமி லேயர் ஒதுக்கீட்டில் SC முக்கிய தீர்ப்பு

பிற்படுத்தப்பட்டோருக்கான(OBC) கிரீமி லேயர் நிலையை பெற்றோரின் வருமானத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை, சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், பெற்றோரின் வருமானத்தை காரணம் காட்டி பணி நியமனம் மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. அவர்களின் நியமனங்களை மறுத்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களை SC தள்ளுபடி செய்துள்ளது.


