News March 2, 2025
டெய்லி டிபனாக தோசை சாப்பிடலாமா..?

நல்லது தான் என்கிறார்கள். ஆனால், அவ்வப்போது தானியங்கள், கறிவேப்பிலை, வெந்தயம், கீரை ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிடலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். பாதாம், பிஸ்தாவில் புரோட்டின் அதிகம் இருப்பதால், அவற்றை சட்னியில் சேர்த்து உட்கொள்ளவும் அறிவுறுத்துகிறார்கள். இது எடை அதிகரிக்க விரும்புவோருக்கு சிறந்த வழி எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள். நாளை உலக தோசை தினம். உங்களுக்கு பிடித்த தோசை வகை எது?
Similar News
News March 19, 2026
இனி ஒரு உயிரும் போக வேண்டாம்: CM ஸ்டாலின்

இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின் போது உணர்ச்சிவயப்பட்டு ரயில் முன் பாய்ந்த <<19421676>>சிவா உயிரிழந்தது<<>> மனதை கனக்கச் செய்வதாக CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மொழிப்போரில் நாம் இழந்த உயிர்ப்பலிகள் போதும் என்றும், இனி ஒரு உயிரும் போகக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 19, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 19, பங்குனி 5 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்:6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News March 19, 2026
தேர்தல் நேரத்தில் ‘அமைதிப்படை’ ரீ-ரிலீஸ்

தமிழில் எத்தனையோ அரசியல் நையாண்டி படங்கள் வந்தாலும், எப்போதுமே டாப்பில் இருப்பது ‘அமைதிப்படை’ படம்தான். 1994-ல் வெளியான இப்படம் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இருப்பதுதான் தனிச் சிறப்பு. அப்படிப்பட்ட ‘அமைதிப்படை’ ஏப்ரல் 10-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யபடுகிறது. இதன் புதிய டிரெய்லர் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது. தேர்தல் நேரத்தில் படம் வருவதால் நல்ல வைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


