News March 2, 2025
தமிழக மாடல் தான் வளர்ச்சி மாடல்: பிரசாந்த் கிஷோர்

மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மாடல் இருக்க முடியும் என்றால், அது ‘தமிழக மாடல்’ தான் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ஊழல், மதவாதம், வாரிசு அரசியல் ஆகியவை இங்கு பெரிய சவாலாக உள்ளதாகவும், மதவாதம் தலைதூக்கியதற்கு BJPதான் காரணம் என்றும் சாடினார். நீண்ட அரசியல் பயணம் கொண்ட மு.க.ஸ்டாலினை வாரிசு அரசியலாக பார்க்க முடியாது எனவும், உதயநிதி அப்படி அல்ல என்றும் குறிப்பிட்டார்.
Similar News
News March 13, 2026
BREAKING: அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், அதிமுகவில் இணைந்துள்ளார். சீமானுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் நாதகவில் இருந்து விலகிய அவரை தவெகவில் இணைக்க விஜய் தரப்பில் <<17768130>>பேச்சுவார்த்தை <<>>நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். வரும் தேர்தலில் அவர் நாகை அல்லது மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாம்.
News March 13, 2026
ஜல்ஜீவன் திட்ட நிதியை விடுவியுங்கள்: ஸ்டாலின்

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ₹3,112 கோடியை உடனே விடுவிக்க கோரி PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 3-வது பகுதிக்கு ஒப்புதல் & நிதியுதவி வழங்குமாறும் CM வலியுறுத்தியுள்ளார். தமிழக கிராமப்புறங்களில் சீரான அளவில் குடிநீர் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
BREAKING: சிலிண்டர் விலை ₹6,000? அதிர்ச்சி

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. கேஸ் தட்டுப்பாடு இல்லை எனக் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர் ₹6,000 முதல் ₹6,500 வரை விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஹோட்டல் பில்லுடன் <<19368805>>கேஸ் கட்டணமும்<<>> சேர்க்கப்படும் நிலையில், இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


