News March 2, 2025

அதிமுக நிர்வாகி குறிஞ்சி மணி விலகல்

image

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி குறிஞ்சி மணி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் செயலாளராக பதவி வகித்து வந்த இவர் தனது கட்சியிலிருந்து விலகுவதாகத் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அதிமுக ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இபிஎஸ் இன்று தேனி மாவட்டத்திற்கு செல்ல உள்ளது கவனிக்கத்தக்கது.

Similar News

News March 13, 2026

திருவாரூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

சஞ்சுவை புறக்கணித்தாரா கில்?

image

சஞ்சு அணியில் இடம்பெற்றதால்தான், T20 அணியில் கில்லிற்கு இடம் கிடைக்கவில்லை என்ற கருத்துள்ளது. T20I WC வென்ற இந்திய அணியை பாராட்டி கில் வெளியிட்ட போஸ்ட்டில், சஞ்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு விஷயங்களையும் முடிச்சு போட்ட நெட்டிசன்கள் கில் வன்மத்தை கக்கிவிட்டார் என விமர்சிக்கின்றனர். ஆனால், கில் பதிவிட்ட போட்டோ எடுக்கப்பட்ட Angle-ல், சஞ்சு மறைந்துவிட்டார் என்பதே உண்மை.

News March 13, 2026

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

image

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!