News March 30, 2024

ரிங்கு சிங்கிற்கு பேட் பரிசளித்த விராட் கோலி

image

கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி பேட் பரிசளித்துள்ளார். இந்திய அணி சார்பில் 20 ஓவர் போட்டிகளில் புதிதாக களமிறங்கியுள்ள ரிங்கு சிங், அதிரடியாக கலக்கி வருகிறார். அவர் ஐபிஎல்லில் கொல்கத்தா அணி சார்பில் விளையாடி வருகிறார். நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு கோலியை அவர் சந்தித்தார். அப்போது அவருக்கு கோலி, ஒரு பேட்டை பரிசாக வழங்கினார்.

Similar News

News August 13, 2025

ஒரே வீட்டில் 269 வாக்காளர்கள்

image

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், முசாஃபர்பூரில் உள்ள ஒரு வீட்டில் 269 வாக்காளர்கள் இருப்பதாக ECI தரவு வெளியிட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரேயொரு வாக்கு மட்டுமே உள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இது BJP – ECI வாக்கு முறைகேட்டிற்கான சான்று என காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.

News August 13, 2025

ஆக.. தனிப்பட்ட காரணம் என்று சொல்லக்கூடாது: இபிஎஸ்

image

அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ‘ஆக.. தனிப்பட்ட காரணம்’, Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்து கொள்ளட்டும் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் பையில் வெடிகுண்டு வெடித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

News August 13, 2025

சஞ்சுவுக்கு பதில் ஜடேஜாவைக் கேட்கும் RR

image

IPL 2026 சீசனில் சஞ்சு சாம்சனை வாங்க CSK மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சஞ்சுவை கொடுப்பதாக இருந்தால் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை RR நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணியின் தளபதியாக விளங்கும் ஜடேஜாவை கேட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும், ஜடேஜாவை CSK விட்டுக்கொடுக்காது என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உள்ளதாம்.

error: Content is protected !!