News March 2, 2025
சாம்பியன்ஸ் டிராஃபி Final மேட்ச் இப்படிதான் இருக்குமா?

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் அரையிறுதியில், IND, AUS, NZ, SA மல்லுக்கட்ட போகின்றன. 4 அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. எனினும் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் வலுவாக உள்ளது. அதேபோல் மற்ற அணிகளும் வலுவாக இருந்தாலும் AUS, SA-ஐ வெளியேற்றிவிட்டு, இறுதிப்போட்டியில் IND vs NZ இடையேதான் மோதல் இருக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.
Similar News
News March 19, 2026
அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

அதிமுக கூட்டணி ஏறக்குறைய இறுதியாகிவிட்ட நிலையில், கடைசிநேரத்தில் புதிதாக ஒரு கட்சி இணைந்துள்ளது. மாவீரன் கட்டபொம்மன் பேரவையின் தலைவர் PV ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் EPS-ஐ சந்தித்தனர். இதையடுத்து, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவை அளிப்பதாக PV ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கூட்டணியில் இணைந்த அவருக்கு, EPS நன்றி தெரிவித்துக் கொண்டார்.
News March 19, 2026
ரஜினி ரசிகரை களமிறக்குகிறாரா விஜய்?

ரஜினி குறித்த ஆதவ்வின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, TVK நிற்கும் தொகுதிகளில் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவார்கள் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அறிவித்தார். இந்நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் அசோக் என்பவரை களமிறக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். TVK மீது ரஜினி ரசிகர்கள் கோபத்தில் உள்ள நிலையில், ரஜினி ரசிகரையே விஜய் வேட்பாளராக நிறுத்த திட்டமிடுவது கவனம் பெற்றுள்ளது.
News March 19, 2026
காலம் வேறு… காட்சி வேறு!

இன்று டெல்லி சென்றுள்ள EPS, தன்னை சந்திக்க அமித்ஷா இன்னும் <<19425630>>நேரம் ஒதுக்கவில்லை<<>> என்றார். காலச்சக்கரத்தில் 1998-ஐ ரீவைண்ட் செய்யுங்கள். ஜெயலலிதாவின் ஆதரவு கடிதத்துக்காக வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல மணிநேரம் காத்துக் கிடந்தனர். இதனால் பதவியேற்பும் தாமதமானது. வாஜ்பாய் தூதராக அதிமுகவின் ஆதரவை கேட்டு போயஸ் கார்டன் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை நீண்டநேரம் காக்கவைத்தே சந்தித்தார் ஜெயலலிதா. வரலாறு!


