News March 2, 2025
இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி, இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. வதோதராவில், முதலில் களமிறங்கிய SAM அணி 13.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் விளையாடிய INDM அணி, 11 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ராயுடு 41, நெகி 21, இர்ஃபான் பதான் 13, சச்சின் 6 ரன்கள் எடுத்தனர்.
Similar News
News March 3, 2025
வங்கி டெபாசிட் ரூ.83.44 லட்சம் கோடியாக சரிந்தது

FDஇல் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவதால், வங்கியில் நடப்புக் கணக்கு, சேமிப்பு கணக்கு மீதான டெபாசிட் சரிந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் ரூ.83.50 லட்சம் கோடியில் இருந்து ரூ.83.44 லட்சம் கோடியாக டெபாசிட் குறைந்துள்ளது. இது கடந்தாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.5,900 காேடி குறைவு. 2023இல் 9 மாதங்களில் ரூ.78.27 லட்சம் கோடி- ரூ.78.69 லட்சம் காேடியாக (ரூ.42,000 கோடி) அதிகரித்திருந்தது.
News March 3, 2025
சீனியர்களுக்கு ‘டாட்டா’ காட்டும் திமுக

2026 சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை திமுக முழு வேகத்தில் தொடங்கி விட்டது. அந்த வகையில், பார்த்த முகத்தையே பார்த்து மக்கள் சலித்துவிட்டதால் தேர்தலில் புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வியூக வகுப்பாளர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனைப் படி, கட்சியில் சீனியர்களாக இருக்கும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலருக்கு, வரும் தேர்தலில் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
News March 3, 2025
திமுக கூட்டணியில் கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிக் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஜெயக்குமார் மேலும் தீயை பற்ற வைத்துள்ளார். திமுக கூட்டணி உடையும் என அவர் அளித்த பேட்டி, அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த கட்சி வெளியேறும் என ஜெயக்குமார் கூறாத நிலையில், திருமாவளவன் விசிக MLA எண்ணிக்கை குறித்து பேசியது யூகங்களை கிளப்பியுள்ளது.