News March 1, 2025

இரவு 10 மணி வரை மழை

image

காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, இரவில் வீட்டிற்கு செல்வோர் சாலைகளில் பார்த்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News March 3, 2025

ஸ்பெஷல் சாதனை படைத்த கோலி

image

NZக்கு எதிரான போட்டியின் மூலம் 300 ODIகளை கோலி நிறைவு செய்தார். 300 ODIகளை நிறைவு செய்த 18 வீரர்கள் இருந்தாலும், அவர்களில் யாரும் படைக்காத ரெக்கார்டை கோலி படைத்துள்ளார். அதாவது, கோலி தவிர்த்து இவர்களில் யாரும் தங்கள் அணிக்காக 100 டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. அனைத்து ஃபார்மெட் சர்வதேச போட்டிகளிலும் தங்கள் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரராக கோலி உள்ளார்.

News March 3, 2025

அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. ஒருவன் கைது

image

மத்திய இணை அமைச்சர் ரக்‌ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவில் நடந்த சிவராத்திரி விழாவின் போது இச்சம்பவம் நடந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில CM பட்னவிஸ் உறுதியளித்துள்ளார். அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

News March 3, 2025

இன்றைய (மார்ச்.03) நல்ல நேரம்

image

▶மார்ச்- 03 ▶மாசி – 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM- 03:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: உத்திரம் ▶நட்சத்திரம் : ரேவதி.

error: Content is protected !!