News March 1, 2025
5 பேர் கொலை வழக்கு: கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

கேரளாவில் 5 பேரை கொன்ற இளைஞர் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. ரூ.65 லட்சம் கடன் இருந்ததால், முதலில் தாய், சகோதரருடன் தற்கொலை செய்ய இருந்ததாகவும், தாய் சம்மதிக்காததால் அவரையும், சகோதரரையும் கொலை செய்ய முயன்றதாகவும், இதில் சகோதரர் மட்டும் இறந்ததாகவும், பின்னர் தாம் இல்லாமல் காதலி இருக்க மாட்டார் என கூறி, அவரையும், அலட்சியம் செய்த பாட்டி உள்ளிட்ட 3 உறவினர்களையும் கொன்றதாக கூறியுள்ளார்.
Similar News
News March 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 195 ▶குறள்: சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். ▶பொருள்: இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
News March 3, 2025
ஸ்பெஷல் சாதனை படைத்த கோலி

NZக்கு எதிரான போட்டியின் மூலம் 300 ODIகளை கோலி நிறைவு செய்தார். 300 ODIகளை நிறைவு செய்த 18 வீரர்கள் இருந்தாலும், அவர்களில் யாரும் படைக்காத ரெக்கார்டை கோலி படைத்துள்ளார். அதாவது, கோலி தவிர்த்து இவர்களில் யாரும் தங்கள் அணிக்காக 100 டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. அனைத்து ஃபார்மெட் சர்வதேச போட்டிகளிலும் தங்கள் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரராக கோலி உள்ளார்.
News March 3, 2025
அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. ஒருவன் கைது

மத்திய இணை அமைச்சர் ரக்ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவில் நடந்த சிவராத்திரி விழாவின் போது இச்சம்பவம் நடந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில CM பட்னவிஸ் உறுதியளித்துள்ளார். அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.