News March 1, 2025
ஆஹா… இப்படி ஒரு ஒற்றுமையா?

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளுக்குள்ளும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால், 2023இல் நடைபெற்ற ODI உலகக் கோப்பை தொடரில், மேற்கண்ட அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. தற்போதும் அதேபோல அமைந்துள்ளதால், எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Similar News
News March 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 195 ▶குறள்: சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். ▶பொருள்: இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
News March 3, 2025
ஸ்பெஷல் சாதனை படைத்த கோலி

NZக்கு எதிரான போட்டியின் மூலம் 300 ODIகளை கோலி நிறைவு செய்தார். 300 ODIகளை நிறைவு செய்த 18 வீரர்கள் இருந்தாலும், அவர்களில் யாரும் படைக்காத ரெக்கார்டை கோலி படைத்துள்ளார். அதாவது, கோலி தவிர்த்து இவர்களில் யாரும் தங்கள் அணிக்காக 100 டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. அனைத்து ஃபார்மெட் சர்வதேச போட்டிகளிலும் தங்கள் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரராக கோலி உள்ளார்.
News March 3, 2025
அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. ஒருவன் கைது

மத்திய இணை அமைச்சர் ரக்ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவில் நடந்த சிவராத்திரி விழாவின் போது இச்சம்பவம் நடந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில CM பட்னவிஸ் உறுதியளித்துள்ளார். அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.