News March 1, 2025

+2 பொதுத் தேர்விற்கு தயாராகும் பள்ளிகள்!

image

தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி (திங்கட்கிழமை) +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மேஜைகள் சுத்தம் செய்வது, மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்குவது, பதிவு எண் எழுதும் பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இதனிடையே மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருக்க மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.

Similar News

News March 3, 2025

பாஜக vs காங்: யார் ஹிந்து விரோதி?

image

யார் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதில் பாஜக- காங். இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிலும், மகா கும்பமேளாவில் பங்கேற்காமல் காங். மூத்த தலைவர்கள் ஹிந்து விரோதிகள் என நிரூபித்துள்ளதாக பாஜக சாடியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த காங்., பல மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு இவர்களும் ஹிந்து விரோதிகள் தானே என சாடியுள்ளது.

News March 3, 2025

FIR போட சொன்ன கோர்ட்.. SEBI எடுத்த முடிவு

image

முன்னாள் SEBI தலைவர் மாதபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான பங்குச்சந்தை மோசடி, ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றம் FIR பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து விரைவில் சட்ட நடவடிக்கைகளை தொடங்க இருப்பதாக SEBI அறிவித்துள்ளது. சுபன் ஸ்ரீவஸ்தவா என்பவர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் கோர்ட் இத்தகைய உத்தரவிட்ட நிலையில், இவை அடிப்படை ஆதாரமற்றவை என SEBI மறுத்துள்ளது.

News March 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!