News March 1, 2025
அட இது தெரியாம போச்சே! தினமும் 15 நிமிடம் போதும்

செல்லப்பிராணிகளுடன், தினசரி 15 நிமிடம் செலவிட்டால், நம் மனநிலையை பாதிக்கக்கூடிய, ஆறு நரம்பியல் கடத்திகள் சமநிலை அடைவதாக அரசு உதவி கால்நடை டாக்டர் மெரில்ராஜ் கூறியுள்ளார். ‘Animal Assisted Therapy’ முறையை சுட்டிக்காட்டும் அவர், வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளுடன், தினசரி 15 நிமிடம் செலவிட்டால் போதும், ரத்த அழுத்தம் இயல்பாவதோடு, மன அழுத்தம், சோர்வு, கவலை, பயம், பதற்றம் குறையும் என்கிறார்.
Similar News
News March 3, 2025
இன்றைய (மார்ச்.03) நல்ல நேரம்

▶மார்ச்- 03 ▶மாசி – 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM- 03:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: உத்திரம் ▶நட்சத்திரம் : ரேவதி.
News March 3, 2025
பாஜக vs காங்: யார் ஹிந்து விரோதி?

யார் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதில் பாஜக- காங். இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிலும், மகா கும்பமேளாவில் பங்கேற்காமல் காங். மூத்த தலைவர்கள் ஹிந்து விரோதிகள் என நிரூபித்துள்ளதாக பாஜக சாடியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த காங்., பல மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு இவர்களும் ஹிந்து விரோதிகள் தானே என சாடியுள்ளது.
News March 3, 2025
FIR போட சொன்ன கோர்ட்.. SEBI எடுத்த முடிவு

முன்னாள் SEBI தலைவர் மாதபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான பங்குச்சந்தை மோசடி, ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றம் FIR பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து விரைவில் சட்ட நடவடிக்கைகளை தொடங்க இருப்பதாக SEBI அறிவித்துள்ளது. சுபன் ஸ்ரீவஸ்தவா என்பவர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் கோர்ட் இத்தகைய உத்தரவிட்ட நிலையில், இவை அடிப்படை ஆதாரமற்றவை என SEBI மறுத்துள்ளது.