News March 1, 2025
கோவிந்தாவுடன் டைவர்சா? மனைவி விளக்கம்

பாலிவுட் நடிகர் கோவிந்தாவும், மனைவி சுனிதா அகுஜாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து சுனிதா முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். அரசியலில் கோவிந்தா இருப்பதாகவும், இதனால் தனிப்பட்ட வாழ்க்கை,, அரசியலுக்கு என தனித்தனி வீடு இருப்பதாகவும், இதை வைத்து விவாகரத்து என எப்படி கூறலாம் என அவர் கூறியுள்ளார். 2 பேரையும் பிரிக்க யாராலும் முடியாது என்றும் சுனிதா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2025
WOMEN’S HEALTH: தொடையில் இப்படி இருக்கிறதா?

பெண்களுக்கு இடுப்பு, தொடை & கால் சருமத்தில் தோன்றும் மேடு பள்ளமான கொழுப்புத் திட்டுகள், உடல் தோற்றத்தின் அழகை பாதிக்கலாம். இது அதிக உடல்பருமன் கொண்ட பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். சருமத் தோலில் கொழுப்பு ஆங்காங்கே திட்டுத்திட்டாக சேர்வதே இதற்கு காரணம். இதிலிருந்து விடுபட பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. எனினும், மசாஜ், டிரை பிரஷிங், டயட் போன்ற எளிதான வழிகள் மூலமும் இதை கட்டுப்படுத்தலாம்.
News March 2, 2025
ரூ.23.48 லட்சம் கோடி UPI பரிவர்த்தனை

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டு மக்கள், ஜிபே, போன் பே உள்ளிட்ட UPI வசதிகள் மூலம் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை விவரம் வெளிவந்துள்ளது. அதில், ஜனவரி மாதத்தில் மட்டும் நாட்டு மக்கள் ரூ.23.48 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 16.99 பில்லியன் எண்ணிக்கை பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. UPI பரிவர்த்தனையில் இது பெரிய சாதனை எனப்படுகிறது. நீங்கள் UPI பயன்படுத்துறீங்களா?
News March 2, 2025
ராசி பலன்கள் (02.03.2025)

*மேஷம்- சுகம் *ரிஷபம்- வரவு *மிதுனம்- நன்மை *கடகம்- சிரமம் *சிம்மம்- புகழ் *கன்னி- பக்தி *துலாம்- தெளிவு *விருச்சிகம்- பாராட்டு *தனுசு- வெற்றி *மகரம்- நலம் *கும்பம்- விருத்தி *மீனம்- பரிசு.