News March 1, 2025
கிரிப்டோகரன்சி மோசடி: மெளனம் கலைத்த தமன்னா

கிரிப்டோகரன்சியில் அதிக லாபம் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை விளம்பரப்படுத்திய நடிகை தமன்னாவிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தன் மீதான புகாருக்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். தனது குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக பொய் செய்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Similar News
News March 17, 2026
நயன்தாரா சர்ச்சை: நடிகர் சங்கம் கண்டனம்!

நடிகைகளை தரக்குறைவாக பேசுவது நாகரிகமான அரசியல் ஆகாது என தென்னிந்திய நடிகர் சங்கம் <<19406314>>சிவி சண்முகத்துக்கு<<>> கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க பெண்களையும், நடிகைகளையும் அநாகரிகமாகச் சித்தரிப்பதுதான் உங்கள் கொள்கையா எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது. முன்னதாக, தனது கருத்துக்கு சிவி சண்முகம் வருத்தம் தெரிவித்திருந்தார்.
News March 17, 2026
‘தவறு செய்துவிட்டேன்’.. ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டார்

முந்தைய அதிமுக ஆட்சியில் EPS-க்கு ஆதரவளித்ததற்கு OPS மன்னிப்பு கேட்டுள்ளார். நெல்லை திமுக கூட்டத்தில் பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் EPS-க்கு தான் ஆதரவளித்தது மிகப்பெரிய தவறு என்றும், அவருக்கு எதிராக வாக்களித்திருந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 17, 2026
செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை முடிவடைந்தது. 6 மணி நேர விசாரணையில், கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெகவினர் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக, விஜய் பரப்புரையின் நடுவே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது தொடர்பாகவும், மக்கள் பாதிக்கபட்டது குறித்து எப்போது தகவல் கிடைத்தது; எப்போது ஹாஸ்பிடல் சென்றார் என்பது தொடர்பாகவும் கேட்கப்பட்டது.


