News March 1, 2025
உலகின் மிக வயதான கிரிக்கெட் வீரர் மரணம்

உலகின் மிக வயதான கிரிக்கெட்டர் என அழைக்கப்பட்ட தெ.ஆப்பிரிக்க EX வீரர் ரோன் டிராபர் (98) காலமானார். தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அவர், 1950ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்டுகளில் விளையாடினார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். அதில் தொடர்ந்து 2 சதம் விளாசிய முதல் தெ.ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனை படைத்தார். அவரின் சராசரி ரன் குவிப்பு 41.64%ஆகும்.
Similar News
News March 1, 2025
பாக்.கில் IND விளையாடாதது நல்லது: உத்தப்பா

சாம்பியன் டிராபி போட்டியில் பாகிஸ்தானில் வைத்து இந்தியா விளையாடாதது நல்லது என்று உத்தப்பா தெரிவித்துள்ளார். துபாயில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடி வெற்றி பெற்றது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள உத்தப்பா, பாகிஸ்தானில் இப்போட்டி நடந்திருந்தால், இரு அணிகளும் பரஸ்பரம் புகார் தெரிவிக்க வேண்டிய நிலை வந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
News March 1, 2025
நியூஸ் பேப்பரில் வடை கொடுத்தால் ₹1,000 அபராதம்

நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ₹1,000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறையினர், மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.
News March 1, 2025
தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களா?

டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட, தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல்நலத்துக்கு பல நன்மைகளை கொடுக்கும் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். தரையில் தட்டை வைத்து, குனிந்து உணவை எடுத்துச் சாப்பிடுகையில் ஜீரணம் எளிதாகிறது. தசை- உடல்வலிகள் நீங்குகின்றன. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் உணர்கிறோம். தரையில் அமர்ந்து சாப்பிடுவது அமைதியையும் தருகிறது என்கின்றனர். நீங்க எப்படி சாப்பிடுகிறீர்கள்?