News March 1, 2025
விஜய் கட்சி ஜெயிக்காது: அண்ணாமலை

2026இல் விஜய்யின் தவெக அபார வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை, பிரசாந்த் கிஷோர் வெற்றிபெறும் என சொன்ன கட்சி (தவெக) ஜெயிக்காது. அந்த கட்சிக்கு 3ஆம் இடமே கிடைக்கும் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ஆணவத்துடன் குறுநில மன்னர்கள் போல திமுகவினர் செயல்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே, அடுத்து பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றார்.
Similar News
News March 18, 2026
திண்டுக்கல்லில் லஞ்சம் பெற்ற VAO கைது!

திண்டுக்கல்: பள்ளபட்டியை சேர்ந்த விவசாயி குமார் இன்று விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான தடையில்லா சான்று வழங்க பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் தரகர் சாந்தகுமார் இருவரும் குமாரிடம் ரூ.4,000 லஞ்சம் வாங்கியுள்ளனர். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன் மற்றும் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான குழுவினர், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
News March 18, 2026
நடிகை மீனாவின் புதிய PHOTOS ❤️❤️

90’ஸ் காலகட்டத்தின் Dream Queen-ஆக கொடிகட்டி பறந்த நடிகை மீனாவிற்கு இன்றளவும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய Gen Z-களையும் இன்ஸ்டா மூலம் மீனா வசீகரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை கலர் டிரஸ்சில் இருக்கும் சில க்யூட் போட்டோஸை அவர் வெளியிட்டுள்ளார். நெட்டிசன்கள், ‘மீனம்மா.. உங்க அழகு சீக்ரெட் என்னம்மா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
News March 18, 2026
BIG BREAKING: தேர்தல் கூட்டணி.. விஜய் அறிவித்தார்

NDA – தவெக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியான நிலையில், அது முற்றிலும் வதந்தி என விஜய் விளக்கமளித்துள்ளார். இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலுக்கு வந்தது முதலே தவெகவை அந்த டீம், இந்த டீம் என பேசி அவதூறு பரப்பினர்; ஆனால் தவெக என்றுமே மக்கள் டீம் மட்டும்தான் என விஜய் கூறியுள்ளார். மேலும், தனது மதச்சார்பற்ற கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


