News March 1, 2025
நிழல் பட்ஜெட் என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் வெளியிடுவதற்கு முன், நிழல் பட்ஜெட் வெளியிடுவதை பாமக வழக்கமாகக் கொண்டுள்ளது. இதில், அரசு பட்ஜெட்டில் இந்த இந்த அம்சங்கள் இடம் பெறலாம் என்று விளக்கமாக பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் உள்ள அம்சங்களை பல நேரங்களில் நிதியமைச்சர் எடுத்துக் கொள்வதும் உண்டு. வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், நிதிப்பகிர்வு ஆகியவை நிழல் பட்ஜெட்டிலும் இடம்பெறும்.
Similar News
News March 1, 2025
ஆஹா… இப்படி ஒரு ஒற்றுமையா?

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளுக்குள்ளும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால், 2023இல் நடைபெற்ற ODI உலகக் கோப்பை தொடரில், மேற்கண்ட அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. தற்போதும் அதேபோல அமைந்துள்ளதால், எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
News March 1, 2025
பிரபல நடிகை சுசந்தா காலமானார்

இலங்கையை சேர்ந்த பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி (61) காலமானார். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில், அவர் இன்று காலமானார். சிங்கள திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை சுசந்தா, திரைப்படம், நாடகம் என இரண்டு தளங்களிலும் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர். இவரது மகள் திசுரி யுவனிகாவும் திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு கலைஞர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 1, 2025
பெண்கள் சொல்வது எல்லாமே ‘வேதம்’ அல்ல: ஐகோர்ட் அதிரடி

தன்னை அலுவலக மேலதிகாரி (ஆண்) பாலியல் கொடுமை செய்ததாக, பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் அதிகாரிக்கு ஜாமின் வழங்கிய கேரள ஐகோர்ட், புகார் கொடுப்பவர் பெண் என்பதாலேயே, அவர் சொல்வது எல்லாம் வேதம் என எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும், இருதரப்பு வாதத்தையும் போலீஸ் முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி பிவி குனிகிருஷ்ணன் அறிவுறுத்தினார். நீதிபதியின் கருத்து பற்றி உங்க கருத்து என்ன?