News March 1, 2025

உச்சநீதிமன்றத்தை நாடிய சீமான்: மார்ச் 7ல் விசாரணை?

image

விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயலெட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Similar News

News March 1, 2025

டெல்லி மகளிர் அணிக்கு 148 ரன்கள் இலக்கு

image

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி. பெங்களூரு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற DCW அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய RCBW அணி, 20 ஓவர்களில் 147/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 60 ரன்கள் எடுத்தார். DCW தரப்பில், ஷிகா பாண்டே, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

News March 1, 2025

இரவு 10 மணி வரை மழை

image

காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, இரவில் வீட்டிற்கு செல்வோர் சாலைகளில் பார்த்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News March 1, 2025

போதிய வாய்ப்பில்லை…. ஜோதிகா வருத்தம்

image

குழந்தை பெற்ற பின் தனக்கு படங்களில் நடிக்க போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என ஜோதிகா வருத்தம் தெரிவித்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்தபின் நடிப்பதை குறைத்து கொண்ட அவர், அண்மைக்காலமாக மீண்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜாேதிகா, பாலசந்தர் போன்று பெண்களை மையமாக வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் தற்போது இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

error: Content is protected !!