News March 1, 2025
எம் சாண்ட் விலை கடும் உயர்வு

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள எம் சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதால் TN முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் கரூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் எம் சாண்ட் விலை உயர்த்தப்பட்டபோதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது TN முழுவதும் கட்டுமானத்திற்கான 1 யூனிட் எம் சாண்ட் விலை ₹3,500ல் இருந்து ₹4,500ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News March 18, 2026
பள்ளி விழாக்களில் விஜய் பாடல்களுக்கு தடை!

TN முழுவதும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் விஜய்யின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்கள், குழந்தைகள் பலரும் விஜய் கட்சியின் பெயர், சின்னத்தை கூறும் காட்சிகள் SM-ல் வைரலாகி வருகின்றன. தேர்தல் நேரம் என்பதால், விஜய் பாடல்களை தவிர்க்க வேண்டும் என HM-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News March 18, 2026
Cab ரைட்டில் புது Scam: ₹285-க்கு ₹5,950 பில்!

₹285 பில்லுக்கு உங்ககிட்ட ₹5,950 கேட்டா எப்படி இருக்கும்? அப்படி ஒரு அனுபவம் பெங்களூருவில் ஓலாவில் பயணித்தவருக்கு ஏற்பட்டுள்ளது. ‘ஏன் இவ்வளவு?’ எனக் கேட்டதற்கு, நீங்க கேன்சல் பண்ண ரைடுக்கெல்லாம் சேர்த்து இவ்வளவு வருது, பணத்தை வை என டிரைவர் மிரட்டியுள்ளார். கஸ்டமர் கேரும் கைகொடுக்காத நிலையில், போலீஸ் ஸ்டேஷன் போகலாம் எனக் கூப்பிட, டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டார். உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதுண்டா?
News March 18, 2026
5 தொகுதிகளுக்கு இசைவு தெரிவித்தது ஏன்?

பாஜகவை வீழ்த்தி இந்தியாவுக்கு நல்லதொரு அரசியலை மக்களுக்கு எடுத்துரைக்கவே திமுக கூட்டணியில் தொகுதியை சமரசம் செய்து கொண்டதாக வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைமை தங்களை மிரட்டி பணிய வைக்கவில்லை; 6-ல் இருந்து 5-ஆக குறைத்துக்கொள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததால், தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளோம் என்றார்.


