News March 1, 2025

இங்கிலாந்து அணி பேட்டிங்

image

சாம்பியன்ஸ் டிராஃபி ODI தொடரில் இன்று, இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. கராச்சி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ENG அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த ENG அணி, தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ENG அணி ரசிகர்கள் உள்ளனர்.

Similar News

News March 1, 2025

கனிமொழி எம்பி சுற்றுப்பயணம்

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாளை (2) பகல் 12 மணிக்கு தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை பார்வையிடுகிறார். அதன்பின் வட வல்லநாட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். அதனை எடுத்து உப்பாற்று ஓடையில் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்யும் அவர் தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.

News March 1, 2025

பிப்ரவரி GST வரி வருவாய் ₹1.84 லட்சம் கோடி

image

கடந்த பிப்ரவரி மாதத்தில் GST வரி வருவாய் 9.1% அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், மத்திய GST ₹35,204 கோடி, மாநில GST ₹43,704 கோடி, ஒருங்கிணைந்த GST ₹90,870 கோடி மற்றும் கூடுதல் வரி ₹13,868 கோடி என மொத்தம் ₹1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் GST வரி வருவாய் 11% அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2025

அரையிறுதிக்கு முன்னேறியது தெ.ஆப்.,

image

ICC Champions Trophy: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தெ.ஆப்., அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தெ.ஆப்., 29.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தற்போது அரையிறுதியில் இந்தியா., ஆஸி., நியூசி., மற்றும் தெ.ஆப்., அணிகள் மோதுகின்றன.

error: Content is protected !!