News March 1, 2025
பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்த CM ஸ்டாலின்

CM ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என 3 முறை முழக்கமிட்டு திமுகவினர் உறுதிமொழி எடுத்தனர். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்பதே ஒரே இலக்கு, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Similar News
News April 7, 2026
BREAKING: கடைசி நேரத்தில் அதிமுகவுடன் இணைந்தார்..

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மதிமுக மாநில நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவரும், வைகோவுக்கு வலதுகரமாக இயங்கி வந்தவருமான முருகனின் விலகல் அக்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக ஆடுதுறை முருகன் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில், வாய்ப்பு வழங்காததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 7, 2026
செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தம்

கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனையை அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் மற்றும் வழக்கு விவரங்கள் புதிதாக கட்டப்படும் வீடு ரோட்டரி லைசன்ஸ் காலாவதியானது போன்ற காரணங்களால் 5 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளது.
News April 7, 2026
திமுகவிலிருந்து விலகினார் PT செல்வகுமார்

விஜய்யின் Ex மேனேஜரும், திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளருமான <<19108223>>PT செல்வகுமார்<<>> அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காலம் தனக்கு அதிகாரம் அளிப்பதை தள்ளிப் போடுவதாக கூறியுள்ள அவர், கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக சமூக பணியை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திமுகவில் இணைந்த இவர், விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பி வந்தார்.


