News March 1, 2025
ஆகஸ்டில் வருகிறான் ‘பைசன்’

மாரிசெல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் பைசன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், துருவ் உடன் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
Similar News
News March 1, 2025
PNB வங்கியின் வீட்டு கடன் வட்டி குறைப்பு.. இன்று அமலானது

EBLR உடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடனுக்கான வட்டியை பஞ்சாப் நேசனல் வங்கி அண்மையில் குறைத்தது. இந்த வட்டி குறைப்பு மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி, வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புளோட்டிங் வட்டி விகிதத்தில் புதிதாக வாங்கிய வீட்டு கடன் அனைத்தும் இபிஎல்ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இபிஎல்ஆரில் செய்யப்படும் மாற்றம், இஎம்ஐயில் பிரதிபலிக்கும்.
News March 1, 2025
காவல்துறை செய்தது தவறு: அண்ணாமலை

சீமான் விவகாரத்தில் போலீசார் நடந்து கொண்ட முறை சரியல்ல என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். சீமானிடமே நேரில் சம்மனை வழங்கியிருக்கலாம் என கூறிய அவர், தேடப்படும் குற்றவாளியின் வீட்டில்தான் சம்மன் ஒட்டுவார்கள் என்றார். மேலும், இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே போலீசார் நடந்துகொண்ட விதம் சரியில்லை என்று விமர்சித்த அவர், காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.
News March 1, 2025
யார் பெஸ்ட்? அஜித்- விஜய் ரசிகர்களிடையே மோதல்

அஜித் – விஜய் ரசிகர்களிடையே சோஷியல் மீடியாக்களில் சண்டை பற்றி எரிகிறது. நேற்று வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் முழுவதும் மாஸான சம்பவங்கள் இருந்தாலும், சின்ன வயது அஜித்தின் கெட்டப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையும், கோட் படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் உருவான சின்ன வயது விஜய்யும் ஒப்பிட்டு, யார் பெஸ்ட்? என இருவரின் ரசிகர்களும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.