News March 1, 2025
ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் – SK படங்கள்?

Dawn Pictures தயாரிக்கும் ‘இட்லி கடை’ ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. ஜுனில் தனுஷின் ‘குபேரன்’ வெளியாவதால், ஆகஸ்ட் 15க்கு இட்லி கடை வெளியாகலாம் எனப்படுகிறது. ஆனால், அதே நாளில் SKவின் மதராஸி ரிலீஸாவதாக ஒரு தகவல் இருக்கிறது. பராசக்தி படத்தையும் Dawn Pictures தான் தயாரிக்கிறது என்பதால், தேவையற்ற ஒரு சிக்கல் வேண்டுமா என தயாரிப்பு நிறுவனம் தயக்கத்தில் இருக்கிறது என்கிறார்கள். Clash வருமா?
Similar News
News March 1, 2025
உயரும் இந்தியாவின் செல்வாக்கு: PM மோடி

உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும், உலகிற்கு புதிய பொருளாதார பாதையை இந்தியா காட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், உலக நாடுகளின் தொழிற்சாலையாக இந்தியா மாறியுள்ளதாகவும், இந்தியாவின் வெற்றியை விரிவாக அறிய உலகம் விரும்புவதாகவும் கூறினார்.
News March 1, 2025
மகளிர் உரிமைத் தொகை: மேலும் சில லட்சம் பேர் சேர்ப்பு?

ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் சில லட்சம் பேர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.. ஏற்கெனவே மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விரைவில் தகுதியான பெண்களை இந்தத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகக்கூடும் என சொல்லப்படுகிறது.
News March 1, 2025
PNB வங்கியின் வீட்டு கடன் வட்டி குறைப்பு.. இன்று அமலானது

EBLR உடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடனுக்கான வட்டியை பஞ்சாப் நேசனல் வங்கி அண்மையில் குறைத்தது. இந்த வட்டி குறைப்பு மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி, வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புளோட்டிங் வட்டி விகிதத்தில் புதிதாக வாங்கிய வீட்டு கடன் அனைத்தும் இபிஎல்ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இபிஎல்ஆரில் செய்யப்படும் மாற்றம், இஎம்ஐயில் பிரதிபலிக்கும்.