News March 1, 2025

மாசி மகம் தெப்பத் திருவிழா நாளை ஆரம்பம்

image

திவ்ய தேசங்களில் 47-வது திவ்ய தேசமாக கருதப்படும், மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நாளை 2-ந் தேதி கொடியேற்றத்துடன் மாசி மகம் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக இன்று மாலை விசுவசேனர் புறப்பாடு, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது.‌ அதை தொடர்ந்து நாளை 2-ந் தேதி காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவில் அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை நடைபெறும்.

Similar News

News April 30, 2025

திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

அவ­னி­யா­பு­ரம் அயன்பாப்­பா­குடியை சேர்ந்­தவர் அழ­கர் மகன் முனி­ய­சாமி(35). திரு­மணம் ஆகாத இவருக்கு குடிப்­ப­ழக்­கம் இருந்­தது. திருமணம் ஆகாததை நினைத்து அடிக்­கடி புலம்­பி கொண்­டி­ருந்­துள்­ளார். இதனால் 2 முறை தற்­கொலைக்கு முயன்று காப்­பாற்­றி­ உள்­ள­னர். இந்நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள மாட்­டு கொட்­ட­கை­யில், மாடு கட்டும் கயிற்­றால் தூக்குபோட்டு நேற்று தற்­கொலை செய்து கொண்­டார்.

News April 29, 2025

மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.

News April 29, 2025

மதுரை பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

மதுரை மக்களே அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
▶️திருமங்கலம் -04549-280361
▶️தி.குன்றம்-04182-220620
▶️உசிலம்பட்டி -04552-253510
▶️ மேலூர் -0452-2487725
▶️ சமயநல்லூர் -0452-24635360
▶️மதுரை நகர் -0452-2330031
▶️திலகர் திடல் -452-2533247
▶️தல்லாக்குளம்-0452 – 2538015
இந்த எண்களை தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.

error: Content is protected !!