News March 1, 2025
நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ…

நீண்ட ஆரோக்கியமான உடல்நிலைக்கு இந்த சிம்பிளான 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க: சிக்கன், மட்டனுக்கு பதிலாக மீனை அதிகமாக சாப்பிடுங்கள். எப்போதாவது உண்ணாவிரதம் இருங்கள். உடலுக்கான பெஸ்ட் டையட்டை டாக்டரிடம் கேட்டு அறியுங்கள் * உடற்பயிற்சி, ஏரோபிக், யோகாவை வழக்கமாக்கி கொள்ளுங்கள் *பல நோய்களுக்கு தனிமை ஒரு முக்கிய காரணியாகிறது. எனவே நண்பர்கள், குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுங்கள். SHARE IT.
Similar News
News March 1, 2025
சதம் விளாசிய கருண் நாயர்

ரஞ்சி டிராஃபி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி வீரர் கருண் நாயர், சதம் விளாசி அசத்தியுள்ளார். கேரளாவுக்கு எதிரான போட்டியின் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய அவர், 132 (280) ரன் குவித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயர், இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 86 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட்டானார்.
News March 1, 2025
சீமான் பாதுகாவலருக்கு ஜாமின்

சீமான் வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகர் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நடிகை கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க ஒட்டிய சம்மனை கிழித்தது, போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
News March 1, 2025
+2 Exam.. மாணவர்களுக்கு எச்சரிக்கை

நாளை மறுநாள் +2 பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மாணவர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபட வேண்டாம். மீறி விடைத்தாள் பரிமாற்றம், ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால், 1 – 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை அல்லது நிரந்தரமாக படிக்கத்தடை விதிக்கப்படும். இதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படலாம் என அலர்ட் கொடுத்துள்ளது.