News March 1, 2025
அழிவின் விளிம்பில் இருந்து 64% வளர்ச்சி அடைந்த சிங்கம்!

அழிவின் விளிம்பில் இருந்த ஆசிய சிங்கங்களை காப்பாற்ற 1973ல் கிர் லயன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 2010ல் 411 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ல் 674ஐ எட்டியது. அதாவது, 64% எண்ணிக்கை உயர்வு. இத்திட்டம், குஜராத்தின் சாசன் கிர் புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 2023- 2024 நிதியாண்டில் மட்டும் இந்திய அரசாங்கம் ₹155.5 கோடியை ஒதுக்கியது.
Similar News
News April 6, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை 3 நாள்களுக்கு பிறகு மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹140 குறைந்து ₹13,810-க்கும், சவரனுக்கு ₹1,120 குறைந்து ₹1,10,480-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹255-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,55,000-க்கும் விற்பனையாகிறது. SHARE IT.
News April 6, 2026
விசில் ஊதினால் சளி சரியாகும்: செங்கோட்டையன்

குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும் சளி நின்றுவிடும் என செங்கோட்டையன் பேசியுள்ளார். திருச்செங்கோட்டில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மூச்சு பயிற்சி இதயத்துக்கு நல்லது என்பார்கள்; அதற்காக விசில் ஊதுங்கள் என்றார். மேலும், நாளை விசில் சின்னம் இந்தியாவையே ஆளப்போவதாகவும் அவர் பேசியுள்ளார். உங்கள் கருத்து? <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
மகளிர் வங்கியில் ₹50,000.. ராகுல் காந்தி வாக்குறுதி!

பிஹார் தேர்தலில் பாஜகவின் வியூகத்தை அசாமில் காங்., கையில் எடுத்துள்ளது. காங்., ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தொழில் தொடங்க தலா ₹50,000 வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும், அனைத்து குடும்பத்துக்கும் ₹25 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீட்டையும் அவர் அறிவித்துள்ளார். பிஹாரில் ‘MHRY’ திட்டத்தின் கீழ் பெண்கள் சுய தொழில் தொடங்க ₹10,000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


