News March 1, 2025
டிரம்ப் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை: கேமரூன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அவரது முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என்று பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். டைட்டானிக், அவதார் படங்களை இயக்கியிருக்கும் அவர், விரைவில் அமெரிக்காவில் இருந்து வெளியேறி நியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். டிரம்ப் ஆட்சி, மீண்டும் மீண்டும் ஏற்படும் கார் விபத்து போல இருப்பதாகவும் கேமரூன் விமர்சித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
சீமானுக்கு நேரும் அவமானத்தை கவனிக்க வேண்டுமா?

நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கில் சீமான் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், 15 ஆண்டுகளாக இதே வழக்கில் அனைவரும் தன்னை கற்பழித்து வருவதாக ஆதங்கமாகப் பேசினார். இதனால், தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்படும் அவமானம் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை என்றும் அவர் கூறினார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது வாதம் சரியானதா? கமெண்ட்டில் சொல்லுங்க.
News March 1, 2025
கிரிப்டோகரன்சி மோசடி: மெளனம் கலைத்த தமன்னா

கிரிப்டோகரன்சியில் அதிக லாபம் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை விளம்பரப்படுத்திய நடிகை தமன்னாவிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தன் மீதான புகாருக்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். தனது குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக பொய் செய்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
News March 1, 2025
14ஆவது குழந்தைக்கு அப்பா ஆனார் எலான் மஸ்க்

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், 14ஆவது குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார். எலான் மஸ்க், அவரின் 4ஆவது மனைவி சிவோன் ஜிலிஸ் தம்பதிக்கு 4ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்டன் லைகர்கஸ் எனப் பெயரிட்டுள்ளனர். இதுதவிர்த்து, எலான் மஸ்க் மற்றும் அவரின் மற்ற 3 மனைவிகளுக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளன. அண்மையில் எழுத்தாளர் ஒருவர், மஸ்கிற்கு குழந்தை பெற்றிருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.