News March 1, 2025
முத்துப்பேட்டையில் லாரி மீது பைக் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு

முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது, நேற்று இரவு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசாத்நகரை சேர்ந்த நவாஸ்கான் மகன் முகமது தவ்பிக்(22) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 16, 2025
திருவாரூர்: தொழில் முனைவோராக சூப்பர் வாய்ப்பு

திருவாரூர்..வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <
News September 16, 2025
மன்னார்குடியில் திருவிழா நிறைவு

மன்னார்குடி உப்புக்கார தெருவில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தினந்தோறும் இரவு சுவாமி வீதி உலா நடைபெற்ற நிலையில், விழாவின் நிறைவாக நேற்று இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த அம்மனை பக்தர்கள் ஏரளாமானோர் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.