News March 1, 2025
அதிகபட்சம் 8 செ.மீ. மழை

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் 7 செ.மீ., திருவாரூர், நாகை தலா 6 செ.மீ., செங்கோட்டை, தங்கச்சிமடம், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Similar News
News March 1, 2025
கிரிப்டோகரன்சி மோசடி: மெளனம் கலைத்த தமன்னா

கிரிப்டோகரன்சியில் அதிக லாபம் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை விளம்பரப்படுத்திய நடிகை தமன்னாவிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தன் மீதான புகாருக்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். தனது குழு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக பொய் செய்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
News March 1, 2025
14ஆவது குழந்தைக்கு அப்பா ஆனார் எலான் மஸ்க்

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், 14ஆவது குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார். எலான் மஸ்க், அவரின் 4ஆவது மனைவி சிவோன் ஜிலிஸ் தம்பதிக்கு 4ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்டன் லைகர்கஸ் எனப் பெயரிட்டுள்ளனர். இதுதவிர்த்து, எலான் மஸ்க் மற்றும் அவரின் மற்ற 3 மனைவிகளுக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளன. அண்மையில் எழுத்தாளர் ஒருவர், மஸ்கிற்கு குழந்தை பெற்றிருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2025
உலகின் மிக வயதான கிரிக்கெட் வீரர் மரணம்

உலகின் மிக வயதான கிரிக்கெட்டர் என அழைக்கப்பட்ட தெ.ஆப்பிரிக்க EX வீரர் ரோன் டிராபர் (98) காலமானார். தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அவர், 1950ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்டுகளில் விளையாடினார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். அதில் தொடர்ந்து 2 சதம் விளாசிய முதல் தெ.ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனை படைத்தார். அவரின் சராசரி ரன் குவிப்பு 41.64%ஆகும்.