News March 1, 2025
அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடும் நடிகர்

பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடுவேன் என்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் பேசியுள்ளார். தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்ட அவர், அண்ணாமலையுடன் இணக்கமாக இருக்கிறார். இந்நிலையில், அடுத்த பாஜக தலைவர் ஆகும் எண்ணம் இல்லையென்றும் இறுதி வரை கட்சிக்காக உழைப்பேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News March 1, 2025
உலகின் மிக வயதான கிரிக்கெட் வீரர் மரணம்

உலகின் மிக வயதான கிரிக்கெட்டர் என அழைக்கப்பட்ட தெ.ஆப்பிரிக்க EX வீரர் ரோன் டிராபர் (98) காலமானார். தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அவர், 1950ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்டுகளில் விளையாடினார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். அதில் தொடர்ந்து 2 சதம் விளாசிய முதல் தெ.ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனை படைத்தார். அவரின் சராசரி ரன் குவிப்பு 41.64%ஆகும்.
News March 1, 2025
வந்தே பாரத் ரயிலிலும் தமிழ் புறக்கணிப்பு

தமிழ்நாட்டிற்குள் ஓடும் வந்தே பாரத் ரயிலிலும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை-நெல்லை இடையே செல்லும் வந்தே பாரத் ரயிலில் ஒரு இடத்தில் கூட தமிழ் இல்லை. முழுவதும் இந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. I R என்பதையும் (Indian Railway) இந்தியில் பா ஆர் (பாரத் ரயில்வே) என எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த ரயில் சென்னை ICFல் தயாரிக்கப்பட்டது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
News March 1, 2025
பாஜக தேசியத் தலைவராகிறாரா வானதி?

பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் இம்மாதம் 15 அல்லது 16ஆம் தேதிகளில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைவர் பதவிக்கு பாஜக மூத்த பெண் தலைவர்கள் யாரேனும் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் அப்பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.