News March 1, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹160 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ( மார்ச் 1) கிராமுக்கு ₹20 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹7,940க்கும், சவரன் ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 105க்கும், பார் வெள்ளி கிலோ 1,05,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. தங்கம் விலை சரிவு குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 1, 2025
விஜய் கட்சி ஜெயிக்காது: அண்ணாமலை

2026இல் விஜய்யின் தவெக அபார வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை, பிரசாந்த் கிஷோர் வெற்றிபெறும் என சொன்ன கட்சி (தவெக) ஜெயிக்காது. அந்த கட்சிக்கு 3ஆம் இடமே கிடைக்கும் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ஆணவத்துடன் குறுநில மன்னர்கள் போல திமுகவினர் செயல்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே, அடுத்து பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றார்.
News March 1, 2025
போப் பிரான்சிஸுக்கு மூச்சுத் திணறல்: வாடிகன்

சுவாசத் தொற்று பாதிப்புக்காக ரோம் ஹாஸ்பிடலில் போப் பிரான்சிஸ் பிப். 14இல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 15 நாட்களாக தொடர்ந்து மருத்துவக்குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டு இருப்பதாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாச நிலை திடீரென மோசமடைந்ததால் மூச்சுக்குழாய் ஆபரேசன் செய்யப்பட்டு இருப்பதாகவும் வாடிகன் நிர்வாகம் கூறியுள்ளது.
News March 1, 2025
ரெக்கார்ட்ஸை தெறிக்க விடும் குட் பேட் அக்லி..!

அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 2.6 கோடி பார்வைகளை கடந்து இருக்கிறது. மாஸ் ஆக்சன் கதைக்களத்தில் அஜித்தை கொண்டாடக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட்டை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தான் வெளிவர இருப்பதால், ‘அய்யய்யோ… வெயிட்டிங்கிலேயே வெறி ஏறுதே’ என அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.