News March 1, 2025
பெண்ணின் பிறப்புறுப்பில் பாட்டில்.. வழக்கில் திருப்பம்

உ.பி.யில் கடந்த 24ம் தேதி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சிலர் பிறப்புறுப்பில் பாட்டிலை புகுத்தியதாகப் பெண் அளித்த புகாரில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண், இளைஞர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்த நிலையில், இளைஞரையும், அவரது நண்பர்களையும் பழிவாங்க நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இளைஞர்களே உஷார்..
Similar News
News March 1, 2025
நிழல் பட்ஜெட் என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் வெளியிடுவதற்கு முன், நிழல் பட்ஜெட் வெளியிடுவதை பாமக வழக்கமாகக் கொண்டுள்ளது. இதில், அரசு பட்ஜெட்டில் இந்த இந்த அம்சங்கள் இடம் பெறலாம் என்று விளக்கமாக பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் உள்ள அம்சங்களை பல நேரங்களில் நிதியமைச்சர் எடுத்துக் கொள்வதும் உண்டு. வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், நிதிப்பகிர்வு ஆகியவை நிழல் பட்ஜெட்டிலும் இடம்பெறும்.
News March 1, 2025
வார இறுதி விடுமுறை.. 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகத்தால் 600 அரசு சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று 245, இன்று 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நேற்றும், இன்றும் தலா 51 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து நேற்றும், இன்றும் தலா 20 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
News March 1, 2025
உச்சநீதிமன்றத்தை நாடிய சீமான்: மார்ச் 7ல் விசாரணை?

விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயலெட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.