News March 1, 2025
RIP மைக்ரோசாப்ட் ஸ்கைப்

புகழ்பெற்ற வீடியோ காலிங் சாப்ட்வேரான ஸ்கைப்பை மே 2025உடன் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மாறாக, Microsoft Teams ப்ரோமோட் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டு இரு இளைஞர்களால் தொடங்கப்பட்ட ஸ்கைப் சாப்ட்வேர், தொலைத்தொடர்பில் புதிய புரட்சி செய்தது. பின்னர், 2011ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் அதனை வாங்கி புதுப்பித்தது. இந்நிலையில், பரிணாம வளர்ச்சியால் ஸ்கைப் மூடுவிழா காண்கிறது.
Similar News
News March 1, 2025
கூட்டு சேர்ந்த அமெரிக்கா – ரஷ்யா

உலக அரங்கில் பரம எதிரிகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரே அணியில் நிற்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்த வரை, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பொருளுதவி செய்து வந்தார். தற்போது, பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப், இனி பொருளுதவி செய்ய முடியாது என்று சொல்லி போரை நிறுத்த சொல்கிறார். இதன்மூலம், அமெரிக்கா மறைமுகமாக ரஷ்யாவின் பக்கம் நிற்கிறது.
News March 1, 2025
எம் சாண்ட் விலை கடும் உயர்வு

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள எம் சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதால் TN முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் கரூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் எம் சாண்ட் விலை உயர்த்தப்பட்டபோதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது TN முழுவதும் கட்டுமானத்திற்கான 1 யூனிட் எம் சாண்ட் விலை ₹3,500ல் இருந்து ₹4,500ஆக உயர்ந்துள்ளது.
News March 1, 2025
கூலிக்கு பிறகு தெலுங்கு ஹீரோவை இயக்கும் லோகேஷ்

லியோ படத்திற்கு பிறகு, லோகேஷ் ரஜினியின் ‘கூலி’ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை முடித்து அவர், ‘கைதி 2’ தான் இயக்குவார் எனப்படுகிறது. ஆனால், இதனிடையே அவருக்கு பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பட வாய்ப்பை லோகேஷ் ஏற்பார் எனப்படுகிறது. இத்தகவல் வெளியாகவே ரசிகர்கள் மீண்டும் கைதி தள்ளிப்போகுமா என வருத்தத்தில் இருக்கிறார்கள்.