News March 1, 2025
பறவைகள் கணக்கெடுப்பில் மாணவர்கள் பங்கேற்கலாம்

சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேர்வராயன் தெற்கு வனச்சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் வருகின்ற மார்ச் 08, 09 ஆகிய தினங்களிலும் சதுப்பு நில பறவைகள் கணக்கெடுப்பும் மற்றும் மார்ச் 15, 16 ஆகிய தினங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.
Similar News
News November 16, 2025
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு இன்று (நவ.16) காலை, மாலை நடக்கிறது. இத்தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 2,416 பேர் 7 மையங்களில் எழுதவுள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
News November 16, 2025
சேலத்தில் வேலை அறிவித்தார் ஆட்சியர்!

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நவம்பர் 21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கு பல நிறுவனங்கள் வேலை வழங்க உள்ளன. www.tnprivatejobs.in.gov.in தளத்தில் முன்பதிவு அவசியம். இதனை மற்றவர்களுகும் ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
சேலம்: ரூ.520 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை சார்பில், விபத்தில் சிக்கிய 4 பேருக்கு காப்பீட்டுத தொகை வழங்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அருகே உள்ள அஞ்சலகங்கள், தொடர்புகொண்டு இந்த காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். SHARE IT


