News March 1, 2025
நாட்டின் GDP வளர்ச்சி 6.2% ஆக உள்ளது: SBI

2024-25 நிதியாண்டின் 3வது காலாண்டில் நாட்டின் GDP 6.2% – 6.3% ஆக இருக்கும் என எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, 2வது காலாண்டில் (ஜூலை – செப்.) 5.6% ஆக இருந்தது. நிலையான கிராமப்புற பொருளாதாரம், ஊதிய வளர்ச்சி மற்றும் வலுவான விவசாய செயல்திறன் இந்தக் கண்ணோட்டத்தை வலுப்படுத்தியுள்ளதால் GDP 6.2% – 6.3% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார அளவை GDP தான் தீர்மானிக்கிறது.
Similar News
News March 1, 2025
இங்கிலாந்து அணி பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராஃபி ODI தொடரில் இன்று, இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. கராச்சி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ENG அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த ENG அணி, தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ENG அணி ரசிகர்கள் உள்ளனர்.
News March 1, 2025
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதனால் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
News March 1, 2025
பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்த CM ஸ்டாலின்

CM ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என 3 முறை முழக்கமிட்டு திமுகவினர் உறுதிமொழி எடுத்தனர். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்பதே ஒரே இலக்கு, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.