News March 1, 2025
இட்லியில் கேன்சர் அபாயம்: அதிர்ச்சி தகவல்

உணவுகளில் உடலுக்கு உகந்தது ‘இட்லி’ என்கிறோம். ஆனால், அந்த இட்லியே ஆபத்தானது என்றால்? ஆம், பெங்களூருவில் உணவுப் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் உணவகங்களில் பெறப்பட்ட 251 இட்லி மாதிரிகளில் 54-ல் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இட்லியை வேகவைக்கும் தட்டுகளில் பிளாஸ்டிக் தாள்கள் வைக்கும்போது, அதிலிருந்து நச்சு ரசாயனங்கள் <<15611451>>இட்லிக்குள் கலந்து<<>> விடுகிறதாம்.
Similar News
News March 20, 2026
MGR, ஜெ., சிலைகளுக்கு கிளவுஸ் போட்ட அதிகாரிகள்

அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை என ECI அறிவித்தது. இதையடுத்து மதுரையில் Ex CM MGR & ஜெயலலிதா சிலைகளை மூடியிருந்த துணிகளை அதிகாரிகள் அகற்றினர். எனினும் அவர்களின் கை விரல்கள் அரசியல் சின்னத்தை (இரட்டை இலை) குறிப்பதாக கூறி, கைகளை மட்டும் ‘கிளவுஸ்’ போல துணியால் மறைத்துள்ளனர். இந்த விஷயம் SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?
News March 20, 2026
போன்களில் Pre-install-ஆக வரும் ஆதார் ஆப்?

போன்களில் Clock, Calculator போலவே ஆதார் ஆப்பையும் Pre-install முறையில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ஜனவரியில் செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு Email அனுப்பியுள்ளது. ஆனால், இதனால் தனியுரிமை பாதிக்கப்படும் என்றும், இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே தனியாக தயாரிப்பை மேற்கொள்வது சாத்தியமில்லாதது எனக்கூறி சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் இத்திட்டத்தை மறுத்துள்ளன.
News March 20, 2026
சீட்டுக்கு பணம் பெற்று மோசடி.. திமுக தலைமை அதிர்ச்சி!

MLA சீட்டு வாங்கி தருவதாக கூறி OPS ஆதரவாளர் ₹1 கோடி மோசடி செய்த சம்பவம் திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். பெரியகுளம் கவுன்சிலரான சுதாவின் கணவர் நாகலிங்கம், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட OPS-ன் ஆதரவாளரான அபுதாஹிரிடம் பணத்தை கொடுத்துள்ளார். இதில், ஆசிஃப் ராஜா, கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில், எங்கே தவறு நடந்தது என திமுக விசாரணையில் இறங்கியுள்ளது.


