News March 1, 2025
சாம்பியன்ஸ் தொடரை காலி செய்த மழை

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், மழை காரணமாக விறுவிறுப்பை இழந்துள்ளது. முக்கிய லீக் போட்டிகளான AUSvsSA, AUSvsAFG, PAKvsBAN ஆகியவை ரத்தானதால் ரசிகர்கள் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். இத்தகைய சூழல் காரணமாக, ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
Similar News
News March 1, 2025
நடிகை காங் மியுங் ஜூ காலமானார்

பிரபல தென் கொரிய நடிகை காங் மியுங் ஜூ (54) காலமானார். கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையாகப் போராடி வந்த அவரது உயிர் இன்று பிரிந்தது. இதனால், தென்கொரிய திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தென்கொரியாவில் கூனி, நாரா ஆகிய மேடை நாடகங்கள் மூலம் பெரும் புகழை அடைந்த இவர், Extraordinary Attorney Woo திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2025
இந்தியாவில் புதிய ஷோரூம் திறக்கும் டெஸ்லா..!

மும்பையின் பாந்த்ராவில் ஷோரூம் ஒன்றை திறக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இது ஒரு வணிக வளாகத்தில் 5 ஆண்டுகளுக்கு 4000 sft இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல, டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் 2வது ஷோரூம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. டெஸ்லா ஏற்கனவே ஊழியர்களின் பணியமர்த்தல் செயல்முறையை இந்தியாவில் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2025
உங்களுக்கு ‘O’ வகை ரத்தமா? இந்த நோய்கள் வரலாம்

இந்தியாவில் சுமார் 40% மக்கள் ‘O’ வகை ரத்தம் கொண்டவர்கள்தான். இந்த ரத்த வகையைப் பொறுத்து சில நோய்த் தாக்குதல்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி, ’O’ வகை ரத்தம் கொண்டவர்களுக்கு வயிற்றில் அல்சர் & ரத்த வகை பிரச்னைகள் அதிகம் வரலாம். அதேநேரம், இருதயம் தொடர்பான பிரச்னைகள் ‘O’ வகை ரத்தம் கொண்டோரை தாக்குவது மிகக்குறைவு என்றும் கண்டறியப்பட்டுள்ளது.