News March 1, 2025
செல்வத்தைப் பெருக்கும் மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம்!

சனிக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த தினங்களில் ஒன்றாகும். இன்றைய தினம், இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதன் மூலம், வாழ்வில் துன்பங்களை நீக்கி, செல்வத்தைப் பெருக செய்யும் என்பது ஐதீகம்.
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
Similar News
News March 1, 2025
உங்களுக்கு ‘O’ வகை ரத்தமா? இந்த நோய்கள் வரலாம்

இந்தியாவில் சுமார் 40% மக்கள் ‘O’ வகை ரத்தம் கொண்டவர்கள்தான். இந்த ரத்த வகையைப் பொறுத்து சில நோய்த் தாக்குதல்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி, ’O’ வகை ரத்தம் கொண்டவர்களுக்கு வயிற்றில் அல்சர் & ரத்த வகை பிரச்னைகள் அதிகம் வரலாம். அதேநேரம், இருதயம் தொடர்பான பிரச்னைகள் ‘O’ வகை ரத்தம் கொண்டோரை தாக்குவது மிகக்குறைவு என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
News March 1, 2025
ஆகஸ்டில் வருகிறான் ‘பைசன்’

மாரிசெல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் பைசன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், துருவ் உடன் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
News March 1, 2025
இந்தியை தேசிய மொழி என்ற அமைச்சர்

இந்தி மொழியை தேசிய மொழி என்று மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி திணிப்பு தொடர்பான பிரச்னைகள் வெடித்துக் கொண்டிருக்கும் வேளையில், ”தேசிய மொழியான இந்தி, முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும்” என்று அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்த உங்களது கருத்து என்ன?