News March 1, 2025
நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் முதல் பிறை நாளை (02.03.2025) நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்றைய தினமான வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பிறை தென்படவில்லை. ஆகையால், இஸ்லாமிய பெருமக்கள் நாளை முதல் 30 நாள்கள் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடவுள்ளனர். ஷரியத் முறைப்படி இந்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹாஜி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
Shadow Budget: ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை

தமிழக ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை விற்கப்படும் என்பன உள்ளிட்ட 80 தலைப்புகளின் கீழ், வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில், வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் ₹65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குவது, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துவது உள்ளிட்ட திட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
News March 1, 2025
ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் – SK படங்கள்?

Dawn Pictures தயாரிக்கும் ‘இட்லி கடை’ ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. ஜுனில் தனுஷின் ‘குபேரன்’ வெளியாவதால், ஆகஸ்ட் 15க்கு இட்லி கடை வெளியாகலாம் எனப்படுகிறது. ஆனால், அதே நாளில் SKவின் மதராஸி ரிலீஸாவதாக ஒரு தகவல் இருக்கிறது. பராசக்தி படத்தையும் Dawn Pictures தான் தயாரிக்கிறது என்பதால், தேவையற்ற ஒரு சிக்கல் வேண்டுமா என தயாரிப்பு நிறுவனம் தயக்கத்தில் இருக்கிறது என்கிறார்கள். Clash வருமா?
News March 1, 2025
ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வருக்கு தமிழில் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழிலேயே கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆளுநர் தமிழில் கடிதம் எழுதியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தங்களுடைய தலைமையின் கீழ், தமிழ்நாட்டு மக்கள் நலம்பெற வேண்டும் என்று முதல்வரை ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.