News March 1, 2025

இம்மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

image

பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை, 2, 4வது சனிக்கிழமை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு இம்மாதம் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த லீவு நாட்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். முழு விவரங்களை அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.

Similar News

News March 15, 2026

வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model: ஸ்டாலின்

image

வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model என பெயரெடுத்துள்ள மத்திய பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பான தனது X தளப் பதிவில், தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, இந்நிலைமையை சீராக்க PM நடவடிக்கை எடுக்கவும் CM வலியுறுத்தியுள்ளார்.

News March 15, 2026

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!

image

*தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது. *பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்யக் கூடாது. *தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது. *அரசு விழாக்கள் நடத்தக் கூடாது, *கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

News March 15, 2026

திமுக கூட்டணியில் இருந்து விலகல்? கடைசி நேரத்தில் ஷாக்

image

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தவாகவுக்கு 3 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுள்ளார். ஆனால், திமுகவோ ஒரு தொகுதிதான் தர முடியும், அதிலும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என கறாராக கூறிவிட்டதாம். இதனால், அதிருப்தியடைந்த வேல்முருகன், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறக்கூடும் என்றும், இன்னும் சற்றுநேரத்தில் தனது முடிவை அறிவிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!