News March 1, 2025
பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Similar News
News March 1, 2025
முதல்வருக்கு விஜய் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு வரியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தவெகவின் அரசியல் எதிரியாக திமுகவை விஜய் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இந்நிலையில், X தளத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
News March 1, 2025
இட்லியில் கேன்சர் அபாயம்: அதிர்ச்சி தகவல்

உணவுகளில் உடலுக்கு உகந்தது ‘இட்லி’ என்கிறோம். ஆனால், அந்த இட்லியே ஆபத்தானது என்றால்? ஆம், பெங்களூருவில் உணவுப் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் உணவகங்களில் பெறப்பட்ட 251 இட்லி மாதிரிகளில் 54-ல் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இட்லியை வேகவைக்கும் தட்டுகளில் பிளாஸ்டிக் தாள்கள் வைக்கும்போது, அதிலிருந்து நச்சு ரசாயனங்கள் <<15611451>>இட்லிக்குள் கலந்து<<>> விடுகிறதாம்.
News March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபியில் சாதனை படைத்த ஆஸி. அணி!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி பவர்-பிளேயில் (முதல் 10 ஓவர்களில்) 90 ரன்களை அடித்தது. இதுவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு அணி பவர்-பிளேயில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னர், 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 87 ரன்கள் அடித்திருந்தது. இச்சாதனையை ஆஸ்திரேலிய அணி, நேற்று முறியடித்துள்ளது. இந்த சாதனையை யார் முந்துவா?