News March 1, 2025
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் சமி கட்சியின் தலைவர் மௌலானா ஹமீதுல் ஹக் கொல்லப்பட்டார். நவ்ஷேரா மாவட்டத்தில் தருல் உலூம் ஹக்கானியா மதர்சாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
டிரம்ப் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை: கேமரூன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அவரது முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என்று பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். டைட்டானிக், அவதார் படங்களை இயக்கியிருக்கும் அவர், விரைவில் அமெரிக்காவில் இருந்து வெளியேறி நியூசிலாந்து நாட்டில் செட்டில் ஆகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். டிரம்ப் ஆட்சி, மீண்டும் மீண்டும் ஏற்படும் கார் விபத்து போல இருப்பதாகவும் கேமரூன் விமர்சித்துள்ளார்.
News March 1, 2025
அன்பு சகோதரர் ஸ்டாலின்.. ராகுல் பிறந்தநாள் வாழ்த்து

அன்பு சகோதரர் ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். 72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலினுக்கு X தளத்தில் வாழ்த்து கூறிய அவர், இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு, அரசியலமைப்புக்காக உறுதியாகத் தொடர்ந்து நிற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 1, 2025
அதிகபட்சம் 8 செ.மீ. மழை

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் 7 செ.மீ., திருவாரூர், நாகை தலா 6 செ.மீ., செங்கோட்டை, தங்கச்சிமடம், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.